சொர்க வாசல் திறப்பு

சொர்க வாசல் திறப்பு

ஒசூர்:

ஒசூர் பெருமாள் கோவிலில், வைக்குண்ட ஏகாதசி தினமான இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், மிகவும் அரிதானதாக பிரம்மா,விஷ்னு,சிவன் ஆகிய தெய்வங்களின் கோவில்கள் அடுத்தடுத்த மூன்று மலைகளில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது,

வைக்குண்ட ஏகாதசியான இன்று, ஒசூரில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலில் அதிகாலை கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியருளினர்.

வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும்,விஷேச பூஜைகளும் செய்யப்பட்டன சொர்க்க வாசல் திறக்கப்பட்டு காட்சியருளிய பெருமாளை தரிசனம் செய்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த கோவிலில், வைகுண்ட ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைப்பெறும் நிலையில் 6 மணியளவில் கழுகு கோவிலை வட்டமிடும் நிகழ்வு ஆண்டுதோறும் பக்தர்களை ஆச்சர்யப்படுத்துவதுடன் அனைவரின் பக்தியை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கோப்பசந்திரம் வெங்கடரமனாசுவாதி திருக்கோவில்:

வைக்குண்ட ஏகாதசியான இன்று, வெங்கடரமனா சுவாமி என்னும் பெருமாள் கோவிலில் அதிகாலை கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியருளினர்.

வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும்,விஷேச பூஜைகளும் செய்யப்பட்டன சொர்க்க வாசல் திறக்கப்பட்டு காட்சியருளிய பெருமாளை தரிசனம் செய்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த கோவில் தமிழகத்தின் திருப்பதி என அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்