‘பெரியார் 1000’ வினா விடை போட்டி

‘பெரியார் 1000’ வினா விடை போட்டி

ஓசூர்:

ஓசூர் சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாணவர்களிடையே “பெரியார் 1000” என்கிற தலைப்பிலான வினா – விடை தேர்வு நடத்தப்பட்டது.

தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், பெரியார் சிந்தனை உராய்வு மய்யம் சார்பில், 2011 ஆம் ஆண்டு முதல் ‘பெரியார் 1000″ என்கிற தலைப்பில் ஆண்டுதோறும் அரசுப்பள்ளி,அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே பெரியாரை குறித்த வினா விடை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு பரிசுகளை வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.

இதன் ஒருபகுதியாக ஓசூர்,சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு,தனியார் பள்ளிகளில் ‘பெரியார் 1000’ என்கிற தேர்வு நடத்தப்பட்டது.

பெரியாரின் வாழ்க்கை குறித்தும், அவரின் மூடநம்பிக்கைக்கு எதிரானவை மாணவர்கள் அறிந்துக்கொள்ள விதமாக இத்தேர்வுகள் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்