மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் இருமடங்கு உயர்வு!

மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் இருமடங்கு உயர்வு!

சென்னை:

சென்னையில் உள்ள சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அசோக்நகர், கிண்டி, மண்டி, நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் பார்க்கிங் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளனர்.

இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.250லிருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமானநிலைய மெட்ரோ ரயில்நிலைத்தில் ரூ.500லிருந்து ரூ.1000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார்களுக்கு ரூ.3,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்