கழிவு காகிதத்தில் ‘பர்ஸ்’ நிப்ட்-டீ மாணவர் அசத்தல்

கழிவு காகிதத்தில் ‘பர்ஸ்’ நிப்ட்-டீ மாணவர் அசத்தல்

திருப்பூர்:கழிவு காகிதத்தில் கலைநயம்மிக்க பர்ஸ் தயாரித்துள்ளார், திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி மாணவர் பரமசிவம்.திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்- டீ கல்லுாரி முதலாம் ஆண்டு அப்பேரல் பேஷன் டிசைன் மாணவர் பரமசிவம். இவர், கழிவு காகிதங்களில், அழகிய பர்ஸ் தயாரித்துள்ளார். பள்ளிகளில் பரீட்சைக்கு பயன்படுத்திய காகிதங்களை சேகரித்து, அவற்றை, நேர்த்தியாக வெட்டி, இரண்டு அறைகள் கொண்ட பர்ஸ் தயாரித்துள்ளார். பர்ஸ்களின் வெளிப்புறத்தில், அழகிய ஓவியமும் தீட்டியுள்ளார்.பரமசிவம் கூறுகையில், ‘கழிவு காகித பர்ஸ்களை, மிக எளிதாக எவ்வித செலவுமின்றி தயாரிக்கலாம். மாற்று பொருளாக உருவாக்குவதன்மூலம், காகித கழிவை பயனுள்ளதாக மாற்றலாம்.ஊரடங்கு நாளில் பயனுள்ள பொருளை உருவாக்கியது, எனக்கு திருப்தி அளிக்கிறது,’ என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்