ஒன்றிய குழு தலைவர் பதவி; ஒசூர் நிலவரம்

ஒன்றிய குழு தலைவர் பதவி; ஒசூர் நிலவரம்

ஒசூர்:

ஒசூர் பகுதிகளில் இன்று நடைப்பெற்ற ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் குறித்த நிலவரம்.

ஒசூர் ஒன்றிய குழு தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் சசி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ராதா 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

சூளகிரி ஒன்றியத்தை மீண்டும் அதிமுக கைப்பற்றியது அதிமுகவினரே போட்டியிட்ட மறைமுக தேர்தலில் ஆனந்த் என்பவர் 11 வாக்குகள் பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்ட லாவன்யா 14 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வாகி உள்ளார்.

வேப்பனபள்ளி ஒன்றியத்தில் உள்ள 15 கவுன்சிலர் வாக்குகளில் அதிமுக 7 வாக்குகளும்,திமுக 7 வாக்குகளும், ஒரு செல்லாத வாக்கு பதிவானதால் குலுக்கல் முறையில் திமுக வெற்றி பெற்றது.

கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் இந்திய கம்யூமிஸ்ட் கட்சி 10 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் சிபிஐ கட்சியின் கேசவமூர்த்தி போட்டியின்றி வெற்றி பெற்றார்.

தளி ஒன்றியத்தில் உள்ள 30 வார்டுகளில் திமுக16 இடங்களை கைப்பற்றிருந்த நிலையில் இன்று நடைப்பெற்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுகவின் சீனிவாச ரெட்டி 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் வெற்றி பெற்ற இடங்கள்
திமுக-2
அதிமுக-2
சிபிஐ – 1

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்