ஒசூர் ஒன்றியத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பொறுப்பேற்பு

ஒசூர் ஒன்றியத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பொறுப்பேற்பு

ஒசூர்:

ஒசூர், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றோர் தலைவர்களாக ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பதவியேற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 42 சிற்றூராட்சிகளில் இச்சங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படதால் 41 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்று முடிவுகள் ஜனவரி 2 அன்று வெளியிடப்பட்டது

இந்தநிலையில் இன்று, வெற்றி பெற்றோர் ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் செயலாளர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து தலைவர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

அச்செட்டிப்பள்ளி ஊராட்சி தலைவராக சீனிவாச ரெட்டி, சென்னசந்திரம் ஊராட்சி தலைவராக ஜெய்குமார் ரெட்டி, கெலவரப்பள்ளி ஊராட்சி தலைவராக புட்டாரெட்டி ஆகியோர் பதவிப்பிரமானம் செய்து பொருப்பேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த அச்செட்டிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாச ரெட்டி: பொதுமக்களுக்கு சேவை வழங்க வாக்களித்து வாய்ப்பளித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும்,

அரசின் திட்டங்களை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்கி முதன்மை ஊராட்சியாக உயர்த்த இருப்பதாக தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்