வரும் 27ல் உள்ளாட்சி தேர்தல்

வரும் 27ல் உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது ஊரக பகுதிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் எனவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அட்டவணை:
முதல்கட்ட தேர்தல் : 27.12.2019
2ம் கட்ட தேர்தல் : 30.12.2019
வேட்புமனு தாக்கல் : 6.12.2019
மனுதாக்கல் செய்ய இறுதி நாள் : 13.12.2019
வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை : 2.1.2020
மறைமுக தேர்தல் கூட்ட நாள் : 11.1.2020

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்