உள்ளாட்சி தேர்தல் வழக்கு நாளை விசாரணை

உள்ளாட்சி தேர்தல் வழக்கு நாளை விசாரணை

புதுடெல்லி:

மாநில தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகளுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என கடந்த 2ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்தது. அதில் தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரம் தாக்கல் தொடர்பான விசாரணை, நாளை நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்