தமிழகம் முழுவதும் ஜூலை 13 ல் அதிரடி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜூலை 13 ல் அதிரடி அறிவிப்பு

அரசு பள்ளிகளில் வருகின்ற 13ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் தேவையா ? இல்லையா எனபது குறித்து பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரசு பள்ளிகள் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறையை தொடங்க இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு பள்ளிகள் திறப்பதற்கு நீண்ட காலம் ஆகும் என்று அவர் கூறியிருந்தார். ஆன்லைன் வகுப்புகள் குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் வருகிற 13-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்