வீரர்கள் உடலை மீட்க பாக்., வெள்ளைக்கொடி

வீரர்கள் உடலை மீட்க பாக்., வெள்ளைக்கொடி

காஷ்மீர்:

இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை மீட்க எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 10 மற்றும் 11ம் தேதியன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான ஹஜிபூர் நிலைகளில் இருந்து அந்நாட்டு ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். கடும் துப்பாக்கிச் சண்டையின்போது இரு வீரர்களின் சடலங்களை மீட்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் 2 முறை முயற்சித்தும் பின் அவர்கள் பின்வாங்கினர்.

இதனையடுத்து நேற்று வெள்ளைக் கொடியேந்தி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தங்கள் வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்