CAA எதிர்ப்பு போராட்டத்தில் ‘பாகிஸ்தான் வெல்க’ என்று கோஷம்… இளம்பெண்ணுக்கு 14 நாட்கள் காவல்…!

CAA எதிர்ப்பு போராட்டத்தில் ‘பாகிஸ்தான் வெல்க’ என்று கோஷம்… இளம்பெண்ணுக்கு 14 நாட்கள் காவல்…!

கர்நாடகாவில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பிய நிலையில், அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும், இந்த சட்டத்தை திரும்பப் பெறவோ, திருத்தம் செய்யவோ முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.

பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் மேடையில் பேசும் போது, பாகிஸ்தான் வெல்க என்று பொருள் தரும் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பினார். அவரை தடுத்து நிறுத்தி ஓவைசி உள்ளிட்டோர் முயன்றனர். எனினும் அந்தப் பெண் மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் மேடையேறி அந்தப் பெண்ணை கீழிறக்கி கைது செய்தனர்.

அந்த பெண்ணின் பேச்சுக்கு மேடையிலேயே ஓவைசி கண்டனம் தெரிவித்தார். மேலும், அந்தப்பெண்ணுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், அமுல்யாவை தேசத்துரோக வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்