வதந்தியை பரப்பும் இம்ரான்கான்

வதந்தியை பரப்பும் இம்ரான்கான்

நியூயார்க்:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சட்டம் சமமாக உள்ளது. இதற்கு ஆதாரம் ஜம்மு காஷ்மீருக்கான அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.

இதன் பின்புதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா மீது அவ்வப்போது ஏதாவது ஒரு வதந்தியை பரப்பி கொண்டு வருகிறார்.

அமெரிக்கா சென்றுள்ள இம்ரான்கான் நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள் 9 லட்சம் இந்திய ராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார். மருத்துவமனைகள் செயல்படவில்லை. உண்மையான செய்திகள் மூடி மறைக்கப்படுகின்றன.

மேலும், 80 லட்சம் மக்கள் திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த காலத்தில் முன் எப்போதும் இல்லாத கொடுமை ஆகும்.

ஒரு வேளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் காஷ்மீரில் என்ன நடக்குமோ என்பது தற்போது கவலையாக உள்ளது.

அது போன்ற சூழ்நிலையில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் இரு நாடுகளும் அணு ஆயுதங்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்.

இது போன்ற வதந்தியான செய்தியை அமெரிக்காவில் பேசி வருகின்றார். ஒரு வேளை பாகிஸ்தான் அணு ஆயுதத்தை கையில் எடுத்தால், இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று இம்ரான் கானுக்கு தெரியாது பாவம்.

முந்தைய அரசு போன்று மவுனமாக இருந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்.

தற்போது நடப்பது பாஜக தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி அரசு. போர் வந்தால் பாகிஸ்தானில் எதுவும் மிஞ்சாது என்பது உலக நாடுகள் அனைத்தும் அறிந்தவையே.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்