‘சந்திரயான் 2’வை பாராட்டிய பாக்., விண்வெளி வீராங்கனை

  • In General
  • September 9, 2019
  • 212 Views
‘சந்திரயான் 2’வை பாராட்டிய பாக்., விண்வெளி வீராங்கனை

இஸ்லாமாபாத்:

‘சந்திரயான் 2’ வின் திட்டத்தை பாகிஸ்தான் முதல் பெண் விண்வெளி வீராங்கனை பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் டிஜிட்டல் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம் அளித்துள்ள பேட்டியில், ‘சந்திரயான் 2’ விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கச்செய்த சிறப்புமிக்க முயற்சிய மேற்கொண்ட இந்தியாவின் இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்தார்.

மேலும், ‘சந்திரயான் 2’ திட்டமானது தெற்காசியாவில் மட்டுமல்லாது, சர்வதேச விண்வெளித்துறைக்கும் பெருமையை சேர்த்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நமீரா சலீம் ‘விர்ஜின் கேலடிக்’ மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் பாகிஸ்தானிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்