பாக்.,கிற்கு ரூ.42 ஆயிரம் கோடி நிதி..!

பாக்.,கிற்கு ரூ.42 ஆயிரம் கோடி நிதி..!

இஸ்லாமாபாத்:

பொருளாதார கடும் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச நிதியகம் ரூ.42 ஆயிரம் கோடியை நிதியாக வழங்குகிறது.

மந்தமான வளர்ச்சி, உயர் பண வீக்கம் மற்றும் அதிக கடன் ஆகிய காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், அன்னிய செலாவணி கையிருப்பு எப்போது இல்லாத அளவிற்கு வேகமாக குறைந்து வருவதால், இம்ரான்கான் தலைமையிலான அரசு பொருளாதார நிலைமையை சாமாளிக்க திணறி வருகிறது.

இந்நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நிதியததின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இது தொடர்பான சர்வதேச நிதியகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில், அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 42 ஆயிரம் கோடி ரூபாய்) வழங்க சர்வதேச நிதியகம் முன்வந்துள்ளது.

மேலும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளிடம் 2 முதல் 3 பில்லியன் டாலர்களை பெற பாகிஸ்தான் அரசு முடிவுசெய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்