`இது பாகிஸ்தான், இந்தியா அல்ல!’ – போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி

`இது பாகிஸ்தான், இந்தியா அல்ல!’ – போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி

`இது பாகிஸ்தான், இந்தியா அல்ல!’ – போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான நீதிபதி
ராம் சங்கர் ச
நீதிபதி அதர் மினல்லாஹ்

“அரசியலமைப்பு மக்களின் உரிமைகளைக் காக்கும். நீங்கள் போராட்டம் நடத்த விரும்பினால் அனுமதி பெறுங்கள். அனுமதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு வாருங்கள்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்த சமூக செயற்பாட்டாளர் பஷ்துன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அந்நாட்டிலுள்ள தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முன்பு 23 பேர் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை பாகிஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அதர் மினல்லாஹ் விசாரித்தார். விசாரணையின்போது, “ஒவ்வொருவரின் சட்ட உரிமைகளும் பாதுகாக்கப்படும். இது இந்தியா அல்ல, பாகிஸ்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை முடக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கத்தின் முடிவுகளுக்கு மக்கள் ஒருபோதும் அஞ்சக் கூடாது” என்றார்.

மேலும், “அரசியலமைப்பு மக்களின் உரிமைகளைக் காக்கும். நீங்கள் போராட்டம் நடத்த விரும்பினால் அனுமதி பெறுங்கள். அனுமதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு வாருங்கள்” என்றார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் மீதும் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

தள்ளுபடி செய்த அறிக்கையை அமர் ராஷித் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எங்களுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஒற்றுமையுடன் எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. பாகிஸ்தானில் மக்கள் நடத்தும் அமைதியான போராட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் அவர்களின் கருத்து சுதந்திரத்தை அடக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தியாவில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் நீதிபதியின் இந்தக் கருத்து இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலர், இந்தியாவிலும் அனுமதி வாங்கி நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியான முறையில்தான் நடக்கிறது என்றும் தங்கள் நாட்டுப் பிரச்னைகளில் நீதிபதி கவனம் செலுத்தினால் போதும் எனவும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்