ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையை இந்தியாவில் மீண்டும் தொடங்க ஒப்புதல்.. ஆனால் பல்வேறு நிபந்தனைகளுடன்..

  • In General
  • September 17, 2020
  • 169 Views
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையை இந்தியாவில் மீண்டும் தொடங்க ஒப்புதல்.. ஆனால் பல்வேறு நிபந்தனைகளுடன்..

ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை நாட்டில் மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றஅந்த வகையில் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் – ஆஸ்ட்ரா ஸெனகா இணைந்து தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்ட பரிசோதனைகளில் சாதகமான முடிவுகளே வந்தன.

இதனையடுத்து ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், சோதனைகளுக்கான உரிமமத்தை வாங்கியவுடன் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவித்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர்களில் ஒருவருக்கு பாதகமான அறிகுறிகளைக் காட்டியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாடுகளில் தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டது. பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, தன்னார்வலருக்கு “விவரிக்க முடியாத நோய்” ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பு மருந்து சோதனைகளில் இதுபோன்ற இடைநிறுத்தங்கள் “வழக்கமானவை” என்றும் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, சீரம் நிறுவனத்திற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் (Drugs Controller General of India -DCGI) நேற்று ஒரு நோட்டீஸ் அனுப்பியது. வேறு இடங்களில் சோதனை நிறுத்தப்பட்டிருந்தாலும் இந்தியாவில் ஏன் சோதனைகள் தொடர்கிறது என்று அந்த நோட்டீஸில் டி.சி.ஜி.ஐ கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் இங்கிலாந்தில் நோயாளியின் அறிகுறிகளை விவரிக்கும் அறிக்கை ஏன் கிடைக்கவில்லை என்றும் டி.சி.ஜி.ஐ கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து நாட்டில் இந்த வாரம் வாரம் தொடங்க இருந்த சோதனைகளை நிறுத்தப்படும் என்று சீரம் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மீண்டும் தொடங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு, இந்தியாவின் மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 மற்றும் 3-ம் கட்ட சோனைகளுக்கான புதிய ஆட்சேர்ப்புகளை நிறுத்தி வைப்பதற்கான முந்தைய உத்தரவை டி.சி.ஜி.ஐ செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

இருப்பினும் இந்த அனுமதி ஒரு எச்சரிக்கையுடன் வருகிறது. ஸ்கிரீனிங்கின் போது கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது, கூடுதல் தகவல்களை வழங்குவது மற்றும் ஆய்வின் பின்தொடர்தலின் போது ஏற்படும் பாதகமான நிகழ்வுகளை நெருக்கமாகக் கண்காணிப்பது போன்ற சில நிபந்தனைகளை சீரம் நிறுவனத்திற்கு விதித்துள்ளது. மேலும் பாதகமான நிகழ்வுகளை நிர்வகிப்பதற்கான நெறிமுறையின்படி பயன்படுத்தப்படும் மருந்துகள் குறித்த விவரங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்தில் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்தன. இந்த சோதனைகள் பாதுகாப்பானவை என்று அந்நாட்டின் மருந்துகள் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் உறுதிபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.னர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்