தேர்தல் தகறாறு; ஒருவர் வெட்டிக்கொலை

தேர்தல் தகறாறு; ஒருவர் வெட்டிக்கொலை

கோவில்பட்டி:

தூத்துக்குடி அருகே தேர்தல் தகராறில் கற்கலால் தாக்கி ஒருவரை கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்டமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று நடந்த தேர்தலில், டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பச்சேரியில் உள்ள யூனியன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று மாலை 3 மணியளவில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் லதா என்பவரின் கணவர் மாசானசாமி, அவரது சகோதரர் சோமசுந்தரம் ஆகியோர் அரிவாளால் தாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இநந்நிலையில், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை அருகே சாலையோரம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கற்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகலறிந்து அங்கு விரைந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாரியப்பன் உள்ளாட்சித் தேர்தல் மோதலில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்