ஆர்பிட்டரின் தூரம் குறைப்பு

ஆர்பிட்டரின் தூரம் குறைப்பு

பெங்களூரு:

நிலவில் இருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ள ஆர்பிட்டாரின் சுற்றுவட்டப்பாதை தூரத்தை 50 கி.மீ.,ராக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

‘சந்திரயான் 2’ விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்பிட்டர் மூலம் மீண்டும் சிக்னல் கிடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று விக்ரம் லேண்டர் எங்குள்ளது என ஆர்பிட்டர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், துல்லியமாக கணிக்க ஏதுவாக ஆர்பிட்டரின் தூரத்தை குறைக்க இஸ்ரோ முடிவுசெய்துள்ளது.

தற்போது நிலவில் இருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ள ஆர்பிட்டாரின் சுற்றுவட்டப்பாதை தூரத்தை 50 கி.மீ.,ராக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஆர்பிட்டாரின் உதவியுடன் லேண்டரிடம் இருந்து மீண்டும் சிக்னல்களை பெறவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்