10% இடஒதுக்கீடு : நல்ல முடிவை எடுப்போம்..! ஓபிஎஸ் பேட்டி!

10% இடஒதுக்கீடு : நல்ல முடிவை எடுப்போம்..! ஓபிஎஸ் பேட்டி!

சென்னை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட 21 அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த இடஒதுக்கீட்டிற்கு 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 5 கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்