டிரம்புக்கு கடும் எதிர்ப்பு

  • In General
  • January 22, 2020
  • 182 Views
டிரம்புக்கு கடும் எதிர்ப்பு

தாவோஸ்:

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் என அமெரி க்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளது கண்டனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டி நடைபெற்றுவரும், ‘தாவோஸ்- 2020’ என்ற கூட்டத்தில், புவி வெப்பமயமாதல் குறித்து பேசிய காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்,
தற்போது பருவநிலையும் சுற்றுச்சூழலுமே உலகின் மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. பருவநிலை மாற்றத்தை முக்கியப் பிரச்னையாக அரசு கருதாதவரை, அதற்கு எந்த முடிவும் எட்டப்போவதில்லை என தெரிவித்தார்.

மேலும், மரங்களை நட்டால் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு சரியாகாது. உலகத் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெற்று வார்த்தைகளை கூறிவருகின்றனர். உங்களை நம்பமாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என கிரேட்டா தன்பெர்க் தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், நம் வீடு எரி ந்துகொண்டிருப்பதாக, கிரேட்டா தன்பெர்க் கூறுவதைக் கேட்க எனக்கு நேரமில்லை. புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், டிரம்பின் இந்த பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், முட்டாள்களின் வாரிசுகள் என டிரம்ப் விமர்சித்து இருப்பதற்கு, உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்