வெங்காயம் ரூ.150க்கு விற்பனை

  • In Chennai
  • November 26, 2019
  • 176 Views
வெங்காயம் ரூ.150க்கு விற்பனை

சென்னை:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பயிர்கள் நாசமாயின. இதனால் வெங்காயம் நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் தமிழகத்தில் மொத்த விலைக்கடைகளில் வெங்காயத்தை இருப்பு வைக்கக்கூடாது எனவும், இருப்பு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.50 முதல் ரூ.150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்