ரூ.24க்கு வெங்காயம்

ரூ.24க்கு வெங்காயம்

புதுடெல்லி:

டெல்லியில் ரூ.24க்கு வெங்காயம் வழங்க முதல்வர் அர்விந்த் கேஜிரிவால் அறிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள வெங்காயத்தின் தேவை காரணமாக ரூ.80க்கும் மேல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் மக்கள் கடும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விலையேற்றம் குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சலுகை விலையில் வழங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக ரூ.24க்கு டெல்லி முழுவதும் விற்பனை செய்யவும், இதற்காக நடமாடும் வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்