ரூ.33க்கு வெங்காயம்: செல்லூர் ராஜூ

  • In Chennai
  • September 25, 2019
  • 158 Views
ரூ.33க்கு வெங்காயம்: செல்லூர் ராஜூ

சென்னை:

ஆந்திராவில் இருந்து ரூ.30க்கு வெங்காயம் வாங்கப்பட்டு, கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் ரூ.33க்கு விற்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரளித்த பேட்டியில், வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இன்றிலிருந்து ரேசன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்யவும், வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்