பீகாரில் ரூ.35க்கு வெங்காயம்

பீகாரில் ரூ.35க்கு வெங்காயம்

பீகார்:

பீகார் மாநிலத்தில் கூட்டுறவு கடைகள் மூலம் வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி கடுமையாக பாக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடுமையான விலை உயர்வை சந்திக்க நேரிட்டது.

இந்த தட்டுப்பாட்டால் வெங்காயத்தின் விலை ரூ.150 வரை தொட்டுள்ளது. கடுமையான விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பீகாரில் கிலோ ரூ.35க்கும், நபர் ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் வெள்ளிக்கிழமை முதல் கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, இன்று கூட்டுறவு சொசைட்டி அங்காடிகளில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்