வெங்காயம் விலை விர்…

வெங்காயம் விலை விர்…

சென்னை:

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மேலும் கடுமைசயாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட கனமழையின் தாக்கத்தால் அங்கு வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்து வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து தற்போது குறைந்துள்ளது.

தற்போது மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வெங்காயம் கொண்டுவரப்படுவதால், கடந்த வாரத்தில் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட கிலோ வெங்காயம் தற்போது ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், மத்திய பிரதேசத்திலிருந்து மட்டுமே நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வெங்காயம் அனுப்பப்படுவதால், இதன் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவு அவர்கள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்