வெங்காயம் விலை குறைகிறது

வெங்காயம் விலை குறைகிறது

சென்னை:
வெங்காயத்தின் விலை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறையும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரையிலும், சென்னையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கடந்த வாரம் சென்னையில் ரூ.35க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 60 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது இரு மடங்காக விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வெங்காயத்தின் விலை 2 நாட்களில் குறையும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

ஆந்திராவில் இருந்து வெங்காயம் கோயம்பேடுக்கு வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தை பதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்