‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்த அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

நாடுமுழுவதும் சட்டமன்றங்கள் மற்றும நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் பட்சத்தில் வளர்ச்சி பணிகளை செய்ய நேரம் கிடைக்கும் எனவும், செலவுகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் பிரமர் மோடி ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பதில் உறுதியாக உள்ளார்.

இதுசம்பந்தமாக கலந்தாலோசிக்க அனைக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ், திரணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் பிஜூ பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்