மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு!

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு!

புதுடெல்லி:

நாட்டின் 17வது மக்களவையின் சபாநாயகராக, பாஜகவின் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, மக்களவை காங்., தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவை அமர வைத்தனர்.

ஓம் பிர்லா குறித்து பிரதமர் மோடி கூறுகையில், கோட்டா தொகுதியில் ஒருவர் கூட பசியுடன் உறங்க செல்லக்கூடாது, மக்களை மையமாக வைத்து அவருடைய அரசியல் செயல்பாடு இருந்தது. குஜராத் நிலநடுக்கத்தின் போது, பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கி, கடுமையாக பணியாற்றியதை மறக்க முடியாது என ஓம் பிர்லாவை பாராட்டி பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்