வடகொரியா எவ்வாறு வருவாய் ஈட்டுகிறது?

வடகொரியா எவ்வாறு வருவாய் ஈட்டுகிறது?

வடகொரிய அதிபர் கிம் மரணம் அடைந்துவிட்டார் எனக் கூறப்பட்ட வதந்திகளைத் தகர்க்கும் வகையில் அவர் விழா ஒன்றில் ரிப்பன் வெட்டும் வீடியோ வெளியாகி பலரை வியக்கச் செய்தது. வடகொரியத் தலைநகர் பியாங்யங்கில் வளர்ச்சி அடைந்த நாடுகள் போல அதிநவீன கட்டுமானங்கள் உள்ளன. உலகில் இருந்து ஒதுங்கி இருண்ட நாடாக விளங்கும் வடகொரியாவுக்கு எவ்வாறு வருமானம் வருகிறது என்கிற கேள்வி பலருக்கு எழும். வடகொரிய வருவாய், பொருளாதாரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.ஆடை தயாரிப்பு, கனரக இயந்திரத் தயாரிப்பு, மெடலர்ஜி, தங்கம் மற்றும் வைர சுரங்கம், உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலைகள் ஆகியவை வடகொரியாவில் அதிகம். மேலும் சுற்றுலாத்துறையில் வடகொரியாவுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது.ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வடகொரியாவுக்கு வருகை தருகின்றனர். 2018ம் ஆண்டு வடகொரியாவின் ஏற்றுமதி வருவாய் 222 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது.இதுதவிர சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்துதல், நவீன இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் விற்றல் உள்ளிட்ட தொழில்களில் வடகொரியா ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் இதனை பியாங்யங் தலைமை மறுத்துள்ளது.வடகொரியத் தலைநகர் பியாங்யங் மட்டுமே நவீன சொகுசு வாகனங்கள், மெட்ரோ ரயிலகள், அதிநவீன சாலைகள், ஜொலிக்கும் கட்டடங்கள் என காட்சியளிக்கும். வடகொரியாவின் பிற பகுதிகள் ஏழ்மை மிகுந்ததாகவே உள்ளன.

அங்கு வாழும் மக்கள் கடும் உணவுப்பஞ்சத்துக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளனர். வடகொரிய ஹேக்கர்கள் பல மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சிக்களை (டிஜிட்டல் பணம்) ஹேக் செய்துள்ளதாகவும் அதன்மூலம் வடகொரியாவுக்கு பணம் கொழிப்பதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. வடகொரியா அமைந்துள்ள பூகோளப் பகுதியில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய அரிய தாதுக்கள் அடங்கியுள்ளன. இது சுரங்கத் தொழிலுக்கு அதிக லாபம் ஈட்டித் தருகிறது. பசி, பட்டினி, பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றால் வடகொரியாவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் கூலித் தொழிலாளிகள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு மக்கள் இணையத்தைப் பயன்படுத்தாததால் பொருளாதாரம் குறித்த எந்த தகவலும் வெளியே கசியாது. மக்கள் படிப்பறிவில்லாமல் இருப்பதால் அவர்களால் வெளியுலக நடப்புகள் பற்றி அறிந்து கொள்ளமுடியாமல் கிம்மின் ஆட்சிப் பிடியில் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்