கடைசி நாளில் ஏராளமானோர் மனு தாக்கல்

கடைசி நாளில் ஏராளமானோர் மனு தாக்கல்

ஒசூர்:

ஓசூர் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு அளிக்க கடைசி நாளான இன்று, தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் மும்முரமாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் முதல்கட்டமாக டிசம்பர் 27ம் தேதி அன்று நடைப்பெறவுள்ளது.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக 9ம் தேதி முதல் 16ம் தேதி என மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி தினமான இன்று அனைத்து கட்சியினரும் மும்முரமாக வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கள் செய்தனர்.

மேலும் இதுவரை ஒசூர் ஊராட்சி ஒன்றிய பதவிக்கும் மாவட்ட ஒன்றிய பதவிக்கும் வேட்புமனுக்கள் அளிக்க கட்சிகளிடையே சில குளருபடி ஏர்ப்பட்டுள்ளது. காரணம் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளிடையே ஓசூரில் இன்று வரை இட ஒதுக்கிட்டில் உடன்பாடு ஏற்படாததல் கட்சி மூலமாக ஃபாம் யாருக்கு வழங்குவது என பெறும் குழப்பத்தில் கட்சிகள் உள்ளதால், வேட்பு மனு அளிக்க கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளின் மூலமாக வேட்பாளர்கள் மும்முரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில் ஓசூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சந்தியா கோபி, சேவகானப்பள்ளி, சிபிஐ கட்சி சார்பில் முனிராஜ், ஒன்றிய கவுன்சிலர் பேகேப்பள்ளி, காங்கிரஸ் சார்பில் அஷ்வத் ரெட்டி ஒன்றிய கவுன்சிலர் அலசப்பள்ளி, திமுக சார்பில் குணவதி, ஒன்றிய கவுன்சிலர் அவலப்பள்ளி, சுயேட்சையாக ராத கஜேந்திகன் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, நந்திமங்களம், அதிமுக சார்பில் சசி முனிராஜ் ஒன்றிய கவுன்சிளர், ஈச்சங்கூர் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்