பயணியர் ஆதரவில்லை! இ-பாஸ் கெடுபிடிகள்! சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுமா?

பயணியர் ஆதரவில்லை! இ-பாஸ் கெடுபிடிகள்! சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுமா?

கேள்விக்குறியான நிலையில் திருச்சி -செங்கல்பட்டு ரயில் சேவை இப்போது நடந்து வருகிறது. இபாஸ் பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள், கொரோனா குறித்த அச்சம், பயணியரிடையேயான சோதனைகள் என பல்வேறு அம்சங்கள் இப்போது திருச்சி செங்கல்பட்டு இடையிலான சிறப்பு ரயில் தொடர்ந்து இயங்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன் எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.

இந்த இரு ரயில்களிலும் 14 மற்றும் 16 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்