திமுக, சுயேச்சைக்கு அழைப்பு இல்லை

திமுக, சுயேச்சைக்கு அழைப்பு இல்லை

ஒசூர்:

திமுக, சுயேச்சை கவுன்சிலர்களுக்கு அழைப்பில்லாமல் ஒசூரில் ஒன்றியகுழு உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 16 வார்டுகளில் அதிமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்று ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றியது.

இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள்,தலைவர் துணை தலைவர்கள் ஆகியோரின் அறிமுக கூட்டம் இன்று ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதில் அதிமுக உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து திமுக6,சுயேச்சை 1 ஆகிய 7 கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் நடத்தப்பட்டதால் திமுகவினர் அதிருப்தியடைந்து, அழைக்காத அறிமுக நிகழ்ச்சியில் திமுகவின் 6 கவுன்சிலர்கள் வேண்டா வெருப்புடன் முகாம்வாடியவாறே பங்கேற்றது.

ஒன்றியகுழு தலைவரான பிறகு கட்சிகளை இரண்டாம் கட்டமாக வைத்து உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென உடன்பிறப்புக்கள் முனுமுனுக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்