சென்னையில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் இருக்காது..!

சென்னையில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் இருக்காது..!

புதுடெல்லி:

இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது. இதனால், சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர்.

வரும் 2030ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கும் குடிநீர் வசதி இருக்காது. எனவே தண்ணீரை மக்கள் வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.

மேலும், மெட்ரோ நகரமான சென்னையில் 3 ஆறுகள், 4 நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது எனவும், மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரம் மற்றும் மைழயும் அதிகமாக இருக்கிறது என தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில், நிதி ஆயோக்கின் இந்த அறிக்¬கை பீதியை கிளப்பியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்