‘கைலாசா தனிநாடு’; ஐநா.,விடம் நித்தி மனு

‘கைலாசா தனிநாடு’; ஐநா.,விடம் நித்தி  மனு

இந்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஐநா.,விடம் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்தியானந்தா மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், போலீசாரின் கைதுக்கு பயந்து தப்பிச்சென்றுள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாட போலீசார் முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐநா.,விடம் புகார் மனு அளித்துள்ளதாகவும், அதில், இந்து மதத்தை பின்பற்றுவோர் குறிவைத்து ஒடுக்கப்படுவதாகவும், தம்மை ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தி சித்திரவதை செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றங்களை ஒப்புக் கொள்ளாவிட்டால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்வோம் என போலீசார் மிரட்டியது-எனவும், இந்தியாவில் இந்துக்கள் ஒடுக்கப்படுவதால் கைலாசா தனிநாட்டை ஐநா அங்கீகரிக்க நித்தியானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்