‘நிசப்தம்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

  • In Cinema
  • September 11, 2019
  • 195 Views
‘நிசப்தம்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை:

நடிகை அனுஷ்காவின் ‘நிசப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அனுஷ்கா நடிக்கும் ‘நிசப்தம்’ படத்தில், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்தியர் 4 பேருக்கும் அமெரிக்க போலீசாருக்கும் இடையே நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘நிசப்தம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வசனமே இல்லாத படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்