‘‘அமெரிக்காவைவிட பொருளாதார வளர்ச்சி அதிகம்’’

‘‘அமெரிக்காவைவிட பொருளாதார வளர்ச்சி அதிகம்’’

புதுடெல்லி:

அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், சர்வதேச பொருளாதார ஜிடிபி 3.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. உலக அளவில் ஒப்பிட்டால் இந்தியாவின் பொருளாதார நிலை சீராக உள்ளது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது. அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகம். இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும். வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும். கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும். இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறு சிறு குறைபாடுகள் களையப்படும்.

ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிமைப்படுத்தப்படும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும். அனைத்து வரி சிக்கல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்