பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

புதுடெல்லி:

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

நீர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்த உரை:

நடப்பாண்டில் பொருளாதார மதிப்பு 3 லட்சம் கோடி டாலராக இருக்கும், ஒரு மில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய 55 ஆண்டுகள் ஆனது.

தற்போது ஒரு ஆண்டில் ஒரு மில்லியன் டாலர் அதிகரித்து காட்டியிருக்கிறோம்.

அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்.
ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றமே இலக்கு.

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ 10 ஆயிரம் கோடி முதலீடு

சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான், தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு.
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை

நடந்து முடிந்த தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்கு மோடி அரசின் 5 ஆண்டு செயல்பாடுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

ஜிஎஸ்டி மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது.

நீர்வழிப்பாதைகளை மேம்படுத்த வேண்டும், முறைகேடுகளை ஒழித்து நேர்மையான பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே அரசின் இலக்கு.

உதய் மின் திட்டம் மேம்படுத்தப்பட்டு, சிறப்பான சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிப்படை கட்டமைப்புகளுக்கான கடன்களை வழங்க புதிய கடன் உறுதி அளிப்பு நிறுவனம் 2019-2020ல் தொடங்கப்படும்.

தொழில் தொடங்குவதற்கான கொள்கைகள் மேலும் எளிமையாக்கப்படும்.

ஆண்டு ஒன்றுக்கு ரூ 20 லட்சம் கோடி முதலீடு ரயில்வே துறைக்கு தேவைப்படுகிறது.

ஆண்டுக்கு ஒன்றரை கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்பவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

முதலீடுகளை ஈர்ப்பதில் எந்த ஒரு சிறு சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும்.

காப்பீடு முகவர் சேவைகளில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு.

ஊடகம் மற்றும் வான்வழி சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படும்.

சமூக நலத்திட்டங்களை தன்னார்வலர்கள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இந்தியா நிதி திரட்டுவதற்கான நடவடிக்கை, அந்நிய நேரடி முதலீடுகள் 6 சதவீதம் அதிகரிப்பு.

விண்வெளி துறையில் புதிய சாதனைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது, கிராமப்புற பொருளாதாரமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்