நிறுவனங்களின் வரிகள் குறைப்பு

நிறுவனங்களின் வரிகள் குறைப்பு

புதுடெல்லி:

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் துவங்கவுள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, உற்பத்தி துறையில் புதிய நிறுவனங்களுக்கு விதித்துள்ள 25 சதவீத வரி தற்போது 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நிறுவனங்களின் குறைந்தபட்ச மாற்று வரி 18 புள்ளி 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுவதாவும், வரிக் குறைப்பு சலுகைகள் 2023 ஆண்டுவரை தொடரும் எனவும், நிறுவனங்களின் வரிச் சுமை குறைந்துள்ளதால் புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பு உருவாகும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்