நிரவ் மோடியின் சுவிஸ் வங்கி கணக்குகள் முடக்கம்!

நிரவ் மோடியின் சுவிஸ் வங்கி கணக்குகள் முடக்கம்!

புதுடெல்லி:

நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவிஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மீதான ரூ.13 ஆயிரம் கோடி பண மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளியேறிய நிரவ் மோடி, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவரை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகளை இந்திய அதிகாரிகள் முயற்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவிஸ் வங்கி கணக்குள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களின் கணக்குகளில் ரூ.283.16 கோடி வைப்புத்தொகை உள்ளது. இந்த கணக்குகளை முடக்குமாறு சுவிஸ் வங்கிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது.

நிரவ் மோடியின் கணக்கில் 3 கோடியே 73 லட்சத்து 11 ஆயிரத்து 596 டாலர் பணமும், அவரின் சகோதரி கணக்கில் 27 லட்சத்து 38 ஆயிரத்து 136 யூரோ பணமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்