5 ஆண்டில் 5 லட்சம் பேருக்கு வேலை

5 ஆண்டில் 5 லட்சம் பேருக்கு வேலை

வேலூர்:

நாடுமுழுவதும் 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, நாட்டின் சிறுதொழில்கள் மூலம் வேலை வாய்ப்பை அதிகரித்து வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மாணவர்கள் விவசாயத்திற்கான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், பட்டம் படித்த மாணவர்கள் விவசாயத்திற்கான புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்