என்ஐஏ அமைப்புக்கு அதிக அதிகாரம்..! மசோதா நிறைவேற்றம்..!!

என்ஐஏ அமைப்புக்கு அதிக அதிகாரம்..! மசோதா நிறைவேற்றம்..!!

புதுடெல்லி:

‘என்ஐஏ’ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட உளவுத்தாக்குதலை கண்காணித்து அவர்களை கைது செய்யும் பணிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

இந்த ‘என்ஐஏ’வுக்கு அதிக அதிகாரங்களை அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது மக்களவையில் கடும் விவாதம் நடந்தது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இதற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படாது. பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கும் மேலும் சில அதிகாரங்களை வழங்குவதற்காகவே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, கடும் விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்