அடுத்த பிரதமர் மோடியா..? நிதின் கட்காரியா..? ஆர்.எஸ்.எஸ்., அவசர ஆலோசனை..!!

அடுத்த பிரதமர் மோடியா..? நிதின் கட்காரியா..? ஆர்.எஸ்.எஸ்., அவசர ஆலோசனை..!!

நாக்பூர்:

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ., வெற்றிபெற்றால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியாவை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ்., முயன்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.,வின் பிரதம வேட்பாளரை அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தான் முடிவு செய்து வருகிறது. மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் தான்.

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்.,சிடமிருந்து விலகியிருப்பதாகவும், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை ஒதுக்கிவைத்திருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

மேலும், பா.ஜ., வெற்றிபெற்றால் பிரதமராக நிதின் கட்காரியைதான் அமரவைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை அழைத்து நாக்பூரில் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனையடுத்து, பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை முன்நிறுத்த தயாராகிவிட்டது என சமூக வலைதளங்களில் விவாதங்கள் களைகட்டியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்