அமெரிக்காவின் நேவார்க் – மும்பை விமான சேவை ரத்து!

அமெரிக்காவின் நேவார்க் – மும்பை விமான சேவை ரத்து!

நியூயார்க்:

அமெரிக்காவின் நேவார்க்கிலிருந்து மும்பைக்கு விமான சேவை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை நேற்று ஈரான் ராணுவம் சுட்டுவீழ்த்தியது. இதனால் ஈரான் வழியாக விமான சேவையை இயக்குவதில் பாதுகாப்பானதாக இருக்காது என யுனைனெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள நேவார்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு செல்லும் விமானத்தின் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதேபோல் மும்பையில் இருந்து நேவார்க் விமான நிலையம் செல்வதற்கான சேவையையும் அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்