காற்றே தேவையில்லை..! பஞ்சர் ஆகாத டயர்..!!

காற்றே தேவையில்லை..! பஞ்சர் ஆகாத டயர்..!!

புதுடெல்லி:

பஞ்சர் ஆகாத மற்றும் காற்று நிரப்புவது இல்லாமல் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டயரை ஜெனரல் மோட்டார் மற்றும் மிசிலின் நிறுவனம் இணைந்து வடிவமைத்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப டயர்கள் வரும் 2024ல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்த ஆய்வு அமெரிக்காவில் செய்யப்பட்டுவந்தது. இந்த ஆண்டின் இறுதியில் முதற்கட்ட சோதனையாக ஷெவர்லேட் போல்ட் இவி ரக கார்களில் பொறுத்து சோதனை செய்யப்படவுள்ளது.

வருங்காலத்தில் எலக்ட்ரானிக் வகையிலான கார்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை கருத்தில்கொண்டுதான் இந்த புதிய தொழில்நுட்ப டயரை வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்