இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி..!

  • In Sports
  • June 26, 2019
  • 237 Views
இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி..!

லண்டன்:

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தற்போது நீல நிற ஜெர்ஸியுடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஒரே மாதிரியான நிறங்களை தவிர்க்கும் வகையில் ஐசிசி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே நிறத்தை பயன்படுத்தி இரு அணிகள் விளையாடுவதை தவிர்க்க ஐசிசி முடிவுசெய்துள்ளது. தற்போது நீல நிற ஜெர்ஸியை இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் பயன்படுத்தி வருகிறது.

இதில் இங்கிலாந்து அணிக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இந்திய அணிக்கு தற்போதைய நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக, ஆரஞ்சு ஜெர்ஸி அறிமுகப்படுத்துவதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆரஞ்சு ஜெர்ஸியுடன் விளையாட உள்ளது.

இந்த மாற்றத்திற்கு, காவி நிறத்தை மத்திய அரசு புகுத்துவதாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்