ஒசூரில் நீதிமன்ற வளாகம் திறப்பு

ஒசூரில் நீதிமன்ற வளாகம் திறப்பு

ஒசூர்:

ஒசூரில் தொழிலாளருக்கான நீதிமன்றம் தொடங்கியிருப்பது மாவட்டத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என நீதிமன்ற வளாகத்தை தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி பேசினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தற்காலிகமாக தொழிலாளருக்கான நீதிமன்ற வளாகத்தை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

நீதிமன்ற தொடக்க விழாவில் பேசிய முதன்மை நீதிபதி கலாவதி அவர்கள்:

தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் தனியாக பிரிவதற்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் இருந்தபோது 1992 ஆம் ஆண்டு தொழிலாளருக்கான நீதிமன்றம் சேலத்தில் தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் உருவான பிறகு, மாவட்ட தலைநகரமான கிருஷ்ணகிரி யில் அனைத்து நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஓசூர் தொழில் நகரமாக விளங்கி வருவதால் தொழிலாளர்களின் உரிமை மீட்கவும், உடனடி தீர்வு கிடைக்கும் வகையில் ஓசூரில் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றம் தொடங்கியிருப்பதாகவும், இதற்கு முன்னர் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிபதி மாதமொருமுறை ஓசூரில் வழக்குகளை விசாரித்து வந்ததாகவும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தொழிலாளர் நீதிமன்றம் தொடங்கியிருப்பது மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், தற்போது வரை தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 288 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தற்போதைய நீதிமன்றமத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு ஒசூரில் தொழிலாளர் நீதிமன்றம் நிரந்தரமாக செயல்படும் என்றார்.

தற்போது தற்காலிக கட்டிடம் 17 லட்சம் ரூபாயில் சரிசெய்யப்பட்டிருப்பதாகவும், நிரந்தர நீதிமன்ற கட்டிடம் 1கோடியே 47 லட்சம் ரூபாயில் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலிருந்து அனைத்து நீதிபதிகள்,வழக்கறிஞர்கள்,நீதிமன்ற அலுவல் பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்