மகனுக்கு தெரியாமல் நடந்த ஆள்மாறாட்டம்

மகனுக்கு தெரியாமல் நடந்த ஆள்மாறாட்டம்

தேனி:
எப்படியும் மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையால் தவறு செய்யாத மகனை சிறையில் தள்ளிவிட்டதாக உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேசன். தனது மகனை மருத்துவராக்க பல்வேறு யுத்திகளை கையாண்டுள்ளார்.

அதில் ஒன்றுதான் நீட் தேர்வின் நுழைவுச்சீட்டில் வேறு ஒருவரை நியமித்து தேர்வு எழுதிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உதித்சூர்யாவிற்கு பொறியியல் படிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் தந்தை வெங்கடேசன் வற்புறுத்தலில் மாணவன் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்துள்ளார்.

உதித்சூர்யாவை கட்டாயப்படுத்தி நீட் தேர்விற்கு தயாராக சொல்லியிருக்கிறார். பின்னர் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்யாமல் மும்பையில் உள்ள மையத்தை தேர்வு செய்துள்ளார்.

மேலும், தேர்விற்கு நீ செல்ல தேவையில்லை உனக்கு பதில் மற்றொருவர் எழுதுவார் என்று வெங்கடேசன் உதித் சூர்யாவிடம் கூறியுள்ளார்.

பின்னர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து படித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவன் தனக்கு மருத்துவம் படிக்க விருப்பம் இல்லை கல்லூரி முதல்வரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர்தான் கல்லூரி முதல்வருக்கு சந்தேகம் வந்து நடந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது.

தற்போது வெங்கடேசன் செய்த தவறுக்கு, குற்றமே செய்யாத மகன் உதித் சூர்யா தண்டனை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்