நீட் மோசடி.. மாணவர் தந்தை உடந்தையா?

நீட் மோசடி.. மாணவர் தந்தை உடந்தையா?

தேனி:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் மீது மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், அந்த மாணவர் குறித்து கடந்த செப்டம்பர் 11ம் தேதி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இமெயில் மூலம் புகார் வந்துள்ளது.

அந்த புகாரில் மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இது பற்றி விசாரணை நடத்த கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினார்.

மாணவர் நீட் தேர்வின்போது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் உள்ள புகைப்படமும், தற்போது கல்லூரியில் படிக்கும் புகைப்படமும் ஒத்துப்போகிறதா என்று ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

இதில் மாணவர் உதித்சூர்யாவின் நீட் தேர்வில் உள்ள அனுமதிச் சீட்டில் உள்ள புகைப்படத்தில் வேறுபாடு இருந்துள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர்.

இதன் பின்னர் உதித்சூர்யா விடுமுறையில் சென்று விட்டார். இதன் பின்னர் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவனின் தந்தைக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏனெனில் அவர் டாக்டராக இருப்பதால் தனது மகனையும் டாக்டராக்க நினைத்து இதற்காக தவறான வழிமுறைகளை தேர்ந்தெடுத்தாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்