தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்

  • In Cinema
  • December 23, 2019
  • 166 Views
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்

புதுடெல்லி:

சிறந்த நடிக்கைக்கான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று வழங்கினார்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில், ஆண்டுதோறும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் 66வது தேசிய திரைப்பட விருகளை துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

சிறந்த நடிகைக்கான விருது மாகாநடி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பெற்றுக்கொண்டார்.

சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த ’மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடை வடிமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்