நிலவுக்கு பெண்களை அனுப்பும் நாசா

நிலவுக்கு பெண்களை அனுப்பும் நாசா

நியூயார்க்:

நிலாவில் தங்கி ஆய்வு செய்ய, பெண்களை அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி அமைப்புகளான ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஆரிஜின் போன்றவைகள், மனிதர்களை தாங்கிச்செல்லும் புதிய ராக்கெட்டுகளையும், விண்கல்னகளையும் உருவாக்கி சில ஆண்டுகளில் ஏவத் தயாராகி வருகின்றன.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும், வரும் 2014ம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக 8 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசிடம் கேட்டுள்ளது.

இந்நிலையில், விண்வெளி வீராங்கனையரும் நிலவுக்கு சென்று தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்காக முதற்கட்ட நிதியை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்